Paristamil Navigation Paristamil advert login

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி ?

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி ?

27 புரட்டாசி 2025 சனி 16:15 | பார்வைகள் : 160


விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர் ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது பான் இந்திய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அட்லீ தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.

இவர்களது கூட்டணியிலான புதிய படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது !இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இதன் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியதாகவும், பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலாஜி தரணிதரன் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்