Paristamil Navigation Paristamil advert login

தண்ணீர் இல்லை, போலீஸ் பாதுகாப்பில்லை: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுமக்கள் பேட்டி

தண்ணீர் இல்லை, போலீஸ் பாதுகாப்பில்லை: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுமக்கள் பேட்டி

28 புரட்டாசி 2025 ஞாயிறு 14:12 | பார்வைகள் : 141


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம் போதுமான போலீஸ் பாதுகாப்பு, குடி தண்ணீர் ஏதும் போதுமான அளவு ஏற்பாடு செய்யவில்லை என கரூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன் கூறியதாவது:

தண்ணீர் இல்லை

முந்தைய நாளில் இபிஎஸ் வந்து இருந்த போது எல்லா இடத்திலும் தண்ணீர் இருந்தது. தண்ணீர் என்கிற பற்றாக்குறையே இல்லை. விஜய் கூட்டத்தில் தண்ணீர் யாருமே ஏற்பாடும் செய்யவில்லை. தண்ணீர் இருந்து இருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.

இரண்டாவது விஜய் கிளம்பி போன பிறகு தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஓட்டு இல்லாத சின்ன சின்ன பசங்கள் தான் நிறைய வந்து இருந்தார்கள். அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார் எவ்வளவோ அடித்து பார்க்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது: ரசிகர்கள் கூட்டம் அதிகம். எங்க மீட்டிங்கோ அங்கே தான் விஜய் பிரசாரம் வாகனத்தில் மேலே ஏற அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணியில் இருந்தே கூட்டம் அதிகம் ஆகிவிட்டது. கரூருக்கு விஜய் 6 மணி ஆகிவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் பேசும் இடத்திற்கு 7.30 மணிக்கு தான் வந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீசார் எங்கே?

கரூர் மக்கள் கூறியதாவது: ஒரு எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ யாராக இருந்தாலும் சரி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. தவறு செய்து விட்டார்கள். குறிப்பிட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தால் இந்த சம்பவமே நடந்து இருக்காது. அதிக கூட்டம் கூடினால் அதற்கு ஏற்ப போலீஸ் வர வேண்டும். 100 பேர் கூடினால் பத்து போலீஸ் வர வேண்டும். 5 லட்சம் பேர் வந்தால் ஆயிரம் போலீசார் வர வேண்டும்.

வெறும் 30 போலீஸ் வைத்து கொண்டு 5 லட்சம் பேரை கண்ட்ரோல் செய்ய முடியுமா? இபிஎஸ் எல்லா இடத்திற்கும் செல்கிறார். அவர் போகும் இடத்தில் ஏதாவது சம்பவம் நடக்கிறதா? மக்கள் கூட்டம் கூடுகின்ற இடத்தில் அரசாங்கம்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் முழு காரணமும் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கரூர் மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

மக்கள் பலி கேடா?

மேலும் கரூர் மக்கள் கூறியதாவது: இவர்கள் செய்யும் அரசியலுக்கு மக்கள் பலி கேடா? சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். இவர்கள் வந்தால் மட்டும் நிறைய போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகிறார்கள். மக்களுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை.முதலில் இந்த சிறிய இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்தார்கள். இது தவறான விஷயம். தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே கேவலம்.

கரூரை வந்து கேவலப்படுத்தி விட்டார்கள். முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லை, காது குத்து கெடா வெட்டுறதுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு தரீங்க, எவ்வளவு மக்கள் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை, இந்த இடுக்கமான இடத்தை ஏன் தந்தீங்க இது அரசாங்கத்தின் தவறு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்