Paristamil Navigation Paristamil advert login

சோயா சாதம்

சோயா சாதம்

28 புரட்டாசி 2025 ஞாயிறு 16:12 | பார்வைகள் : 109


தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என எத்தனையோ வகையான சாதங்களை சாப்பிட்டு இருப்போம். ஆனா நம்மில் பலரும் சோயா சாதம் சாப்பிட்டு இருக்க மாட்டோம். அட என்னங்க சோயா சாதமா? அப்படின்னு பலருக்கும் கேள்வி எழலாம். அட ஆமாங்க, சோயாவை பயன்படுத்தி அதில் சுவையான சோயா சாதம் தயார் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

சோயா சாதம் தயாரிக்க தேவையான பொருட்கள்:1. சோயா 100 கிராம்,2. இரண்டு டீஸ்பூன் மிளகு3.1/2 டீஸ்பூன் சோம்பு4. ஏழு பல்லு பூண்டு5. நாலு துண்டு இஞ்சி6. பச்சை மிளகாய்

செய்முறை:முதலில் நன்றாக சோயாவை பஞ்சுபோல வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக வெந்ததும் பச்சைத் தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு டீஸ்பூன் மிளகு, 1/2 டீஸ்பூன் சோம்பு, ஏழு பல்லு பூண்டு, நாலு துண்டு இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் இதனுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு பேஸ்டுடன் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வேகவைத்த சோயாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சற்று ஓர் ஐந்து நிமிடம் நன்றாக மூடிவிடவும்.

பிறகு கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அரிசி சாதம் (பாஸ்மதி ரைஸ்) சேர்த்த பிறகு அறுசுவையான சோயா சாதம் தயார்.

இந்த சோயா சாதத்தை பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக இருக்கும். அதேபோல, சாப்பிடுவதற்கும் சோயா சாதம் அவ்வளவு அறுசுவையாக இருக்கும். புரட்டாசி மாதம் சிக்கன் ரைஸ் மிஸ் பண்றீங்கனா, இந்த சோயா சத்தம் சாப்பிட்டு பாருங்க... அப்பறம் சிக்கன் பக்கமே போக மாட்டீங்க.. ஒருமுறை நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

வர்த்தக‌ விளம்பரங்கள்