Paristamil Navigation Paristamil advert login

சாதித்த அஜித் அணி

சாதித்த அஜித் அணி

28 புரட்டாசி 2025 ஞாயிறு 16:12 | பார்வைகள் : 176


நடிகர் அஜித்குமார் ‛குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் நாடுகளை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் அவரின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்று வருகிறது. இதில் அஜித் அணி துபாயில் 2ம் இடமும், இத்தாலியில் 3ம் இடமும், பெல்ஜியத்தில் 3ம் இடமும் பிடித்து அசத்தியது.

தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் அணி இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என 4 போட்டிகளில் பங்கேற்கிறது. ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் இன்று (செப்.,28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3ம் இடம் பிடித்து சாதித்துள்ளது.

‛அஜித்குமார் ரேஸிங்' அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் அணி 3ம் இடம் பிடித்த செய்தியை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்