Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கத்திக்குத்து தாக்குதல்!!

பரிஸ் : கத்திக்குத்து தாக்குதல்!!

29 புரட்டாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 413


பரிசில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் அருகே இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

17 ஆம் வட்டாரத்தின் Boulevard Bessières பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில், பயிற்சியில் ஈடுபட்டு வெளியே வந்த நபர் ஒருவரை, வெளியே காத்திருந்த இருவர் மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் குறித்த நபர் காயமைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இருந்தபோதும் இது தொடர்பான தகவல்களை தற்போதே காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த நபர் இன்று ஐந்தாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்