இலங்கையில் அதிகரிக்கும் விவாகரத்துகளின் எண்ணிக்கை

29 புரட்டாசி 2025 திங்கள் 07:42 | பார்வைகள் : 151
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விவாகரத்து விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கல்வியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அனுஷா எதிரிசிங்க, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு விவாதத்தின் போது, இலங்கை சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பெண்களைப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பதன் அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார்.
மேலும், அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தின் நல்வாழ்வுக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1