Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி

பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து பெற மறுத்த இந்திய அணி

29 புரட்டாசி 2025 திங்கள் 11:15 | பார்வைகள் : 114


வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சர் கையில் இருந்து கோப்பையை பெற மறுத்ததால், அமைச்சர் மொஹ்சின் நக்வி கோப்பையை கொண்டு சென்று விட்டார்.

2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அரசியல் காரணங்களால், தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள் மறுத்து வந்தனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக(PCB), பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி(Mohsin Naqvi) உள்ளார்.

இந்திய அணி தொடரை வென்றாலும், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை சூர்ய குமார் யாதவ் பெற மாட்டார் என தகவல் வெளியானது.

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடமிருந்து கோப்பையை பெற இந்திய அணி தயாராக இருந்தது.

ஆனால் நான் தான் கோப்பையை வழங்குவேன் என மொஹ்சின் நக்வி உறுதியாக மேடையில் இருந்ததால், கோப்பை வழங்கும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது.

இந்திய வீரர்களும் அவரிடமிருந்து கோப்பையை பெற முடியாது என உறுதியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் சைமன் டவுல், "இந்தியஅணி இன்றிரவு கோப்பையை பெறாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தெரிவித்துள்ளது. எனவே போட்டிக்குப் பிந்தைய விளக்கக்காட்சி இத்துடன் முடிகிறது" என்று கூறினார்.  

மொஹ்சின் நக்வி கோப்பையை தன்னுடைய ஹொட்டல் அறைக்கு எடுத்து சென்று விட்டார். இதனால், கோப்பை இல்லாமலே இந்திய அணி வீரர்கள் குழு புகைப்படம் எடுத்து, வெற்றியை கொண்டாடினர்.

இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "எங்கள் நாட்டிற்கு எதிராக போரை நடத்துபவரிடமிருந்து எங்களால் கோப்பையை பெற முடியாது. நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அதற்காக அவர் கோப்பையை தனது ஹொட்டல் அறைக்கு எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் மொஹ்சின் நக்வி குறித்து புகார் அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்