Paristamil Navigation Paristamil advert login

காய்ச்சல் தடுப்பூசி தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் அறிவிப்பு

காய்ச்சல் தடுப்பூசி தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் அறிவிப்பு

30 புரட்டாசி 2025 செவ்வாய் 05:54 | பார்வைகள் : 100


காய்ச்சல் தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கனடிய அரசாங்கம் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் மூத்த குடிமக்கள், நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த வாரம் முதல் காய்ச்சல் (Flu) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 27 முதல், ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒன்டாரியோ மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கனடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து காய்ச்சல் தடுப்பூசி திட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய குழந்தைகள், மூத்தவர்கள், ஆஸ்துமா மற்றும் COPD (chronic obstructive pulmonary disease) உடையோர் அதிக ஆபத்தில் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி காய்ச்சலை முற்றிலும் தடுப்பதில்லை, ஆனால் தொற்றை லேசாக ஆக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது என அறிவுறுத்தியுள்ளனர்.

தடுப்பூசி போட்ட 2 வாரங்களுக்கு பிறகே பாதுகாப்பு விளைவுகள் உருவாகும் என தெரிவித்துள்ளனர்.

இந்த காய்ச்சல் தடுப்பூசி, மருத்துவரை அணுக வேண்டிய நிலை அல்லது மருத்துவமனை அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை சுமார் 50 வீதத்தினால் குறைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்