வலதுசாரி மற்றும் மத்தியக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு!!

29 புரட்டாசி 2025 திங்கள் 21:21 | பார்வைகள் : 286
Sébastien Lecornu, வலதுசாரி மற்றும் மத்தியக் கட்சிகளைச் சேர்ந்த ஐந்து கட்சி மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகளை Matignonலில் சந்தித்தார்.
திங்கள் (29/09/25) அன்று நடந்த கூட்டத்தில், தனது எதிர்கால அரசாங்கம் “வேலைக்கு ஆதரவாகவும்” வரிவிலக்கு குறித்த “பரிந்துரைகளை” முன்வைக்கும் என அவர் உறுதியளித்தார். அதேவேளை, சோசலிஸ்ட் கட்சியினர், குறிப்பாக CSG எனப்படும் சமூகக் கட்டணத்தில் தளர்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகச் சந்திப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
மேலும், “நியாயமான வரி முறைமை” குறித்த விவாதங்களுக்கு திறந்த மனப்பாங்கு காட்டவும், “பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை பாதிக்காத வகையில் நியாயமான பங்கு பகிர்வு” செய்யவும், பிரதமர் தனது கூட்டணிக் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1