Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் நிலவும் முட்டை தட்டுப்பாடு!!

பிரான்சில் நிலவும் முட்டை தட்டுப்பாடு!!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 16:34 | பார்வைகள் : 401


பிரான்சில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. முட்டை கொள்வனவு அதிகரித்ததே இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் முட்டை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டை உற்பத்தியாளர்கள் போதிய உற்பத்தியினை மேற்கொள்ள முடியாமல் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முட்டை உண்ணும் பழக்கம் 5% சதவீதத்தால் அதிகரித்து வருகிறது.

பிரெஞ்சு மக்களுக்கு தேவையான 90% சதவீதமான முட்டைகளை மாத்திரமே தற்போது பிரெஞ்சு பண்ணையாளர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். தேவையை 100% சதவீதம் நிவர்த்தி செய்ய €300 மில்லியன் யூரோக்கள் அவரச முதலீடு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்