Paristamil Navigation Paristamil advert login

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9795


 எவ்வளவுதான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான விளைவுகளை நேரிடக் கூடும்.

 
அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர், உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர். ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
 
இப்போது அவ்வாறு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
 
சீஸ்
 
நீண்ட தூரம் ஓடிய பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
 
உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.
 
நவதானிய உணவுகள்
 
நவதானிய உணவுகள் எனப்படும் செரியல் எவ்வளவுதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் நவதானிய உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வேண்டுமெனில், உடற்பயிற்சிக்குப் பின் சர்க்கரை குறைவாக உள்ள கிரனோலாவுடன், பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து, சிறிது ஸ்கிம் மில்க் ஊற்றி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்