நீங்களும் கூந்தல் அழகியாக மாறலாம்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9450
எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:
* ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.
* வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.
* ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.
* இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
* தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.
* கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நீங்களும் கூந்தல் அழகி தான்!