Paristamil Navigation Paristamil advert login

மாதுளம் பழம் தரும் சரும பராமரிப்பு

மாதுளம் பழம் தரும் சரும பராமரிப்பு

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9318


 எல்லா சீஸனிலும் கிடைக்கும் மாதுளம்பழ முத்தில் நிறைந்திருக்கிறது ஏராளமான சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை மனதில் பதிய வைப்போம். 

 
* சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் அதிகமாக முடி உதிரும். இதை சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 
 
3 டீஸ்பூன் வெந்தயம் 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும். 
 
* வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா? மாதுளம் பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடர் செய்து கொள்ள  வேண்டும். இதனுடன் பயத்தம் பருப்பு பவுடரை சம அளவு கலந்து இந்தப் பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும். 
 
* ஒரு டீஸ்பூன் மாதுளை ஜுஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். 
 
* சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும். இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கும் தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும். 
 
* சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு! மாதுளம்பழம் விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும். 
 
* பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையே தான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீஸரில் வைத்து விடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப் போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். 
 
ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன் பயத்த மாவு ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன் சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 
 
* பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜுஸுடன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்க யோசிக்கும்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்