Paristamil Navigation Paristamil advert login

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

13 பங்குனி 2019 புதன் 10:28 | பார்வைகள் : 8942


 உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர்த் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும். 

 
சூரியக் கதிர்கள் பாதிக்காமல் இருக்கத் தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பைத் தருவதுடன், ஈரப்பதத்தை இழக்காமல் தக்க வைக்கும். காற்றினால் தலை முடி கலைந்து சிக்கு பிடிக்காமலும், வண்ணச்சாயம் பூசியிருந்தால் நிறம் மங்காமலும் பாதுகாக்கும்.
 
நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரில் கலக்கப்படும் உப்பும், ரசாயனமும் உங்கள் தலைமுடியைப் பாதிக்கும். எனவே கோடைக் காலத்தில் தலை முடியை மிருதுவாக மென்மையாகப் பாதுகாக்கவும். நீந்துவதற்கு முன்பும், பின்பும் தலைமுடியைத் தண்ணீரில் அலசுவது நல்லது. தலைமுடி சிக்குப் பிடிக்காமல் இருக்கப் பின்னிக் கொண்டு தொப்பியை அணிந்து கொள்ளவும்.
 
கோடைக்கால வெப்பமும் சூரியக் கதிர்களும் உங்கள் தலைமுடியைச் சேதப்படுத்தும். இதில் ப்ளோ டிரையர்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியமானது. எனவே தலைமுடிக்கு ஏர் டிரையைப் பயன்படுத்தி கூந்தலை இயற்கை அலைபோல் ஆட விடுங்கள். முடிந்த வரை ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங்க் ஐயன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
 
தலை முடிக்குள் ஊடுருவிச் செல்வதால் தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தலை முடியின் வேரிலிருந்து எண்ணெயைத் தேய்க்கவும். ஷாம்பூவால் மென்மை யாக அலசவும். தலைமுடியில் இருக்க வேண்டியது ஈரப்பதம், எண்ணெய்ப் பிசுக்கு அல்ல. 
  
கோடைக் காலத்தில் லீவ் இன் கண்டிஷனர் பயன்படுத்த மகத்தான வாய்ப்பாகும். சருமத்துக்கு லோஷன் போன்று இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கவும். இது தலைமுடி சிக்குப் பிடிக்காமல் பாதுகாப்பதுடன் சுருள் முடிக்கும் வழிவகுக்கும். மேற்கண்ட ஆலோசனைகளுடன் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாடு கோடைக் காலத்தை இன்னும் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் வைத்திருக்கும். கோடைக் காலத்தில் ஏராளமான புத்துணர்ச்சி தரும் சுவையான ஆரோக்கியமான உணவுகளும் உள்ளன. எனவே உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நிறைவாகக் கோடையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்! 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்