பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9661
இன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப்பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விளம்பரங்களில் வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் இயற்கை முறையில் அழகாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது தினமும் குறைந்தது 20 முதல் 25 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். இரவில் நன்றாக தூங்குவது உங்கள் அழகை பாதுகாக்க மிகவும் முக்கியம். சரியான தூக்கம் இல்லை என்றால் முகம் வாடி, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும்.
வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும். கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம்.
முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலாடையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம். அதை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தினமும் காலையில் 8 முதல் 10 பாதாம் பருப்பு சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.