கூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி?
18 ஆடி 2019 வியாழன் 11:01 | பார்வைகள் : 8825
நம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். அதற்குப் பெயர் சீபம். சீபம் சுரப்பது குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும். வெளியில் செல்லும்போது தலைமுடியை தூசிபடாதவாறு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் முடி விரைவில் பாழாகி வறட்டுத் தன்மையை அடையும். அடிக்கடி சீப்பு கொண்டு தலை சீவுவதால் ஸ்கால்பில் சுரக்கும் சீபமும் சீப்பின் வழியாக முடி நுனிவரை பரவும்.
தலையில் ரத்த ஓட்டம் சீராகும்.சுருள் முடிக்காரர்களுக்கு முடி அடர்த்தியாக இருப்பதால் வறட்டுத் தன்மை இருக்காது. எளிதில் முடி சிக்கு பிடிக்கும். நீளமுடி உள்ளவர்களுக்கும் வறட்டுத் தன்மையினால் முடி செம்பட்டை நிறமாகத் தெரியும். அலை அலையான முடி உள்ளவர்களுக்கு தலைமுடி சீவாதது போல எப்போதும் அடங்காமல் இருக்கும்.
வறட்சித் தன்மை நீங்க, அவகடோ பழத்தின் (Butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும். தயிரை தலையில் தடவினாலும் நல்லது. அதேபோல் பியரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முடியில் அடித்து பிறகு தலைக்கு குளித்தால் அதுவும் முடிக்கால்களுக்கு ஈரத்தன்மையை அளிக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது முடிந்தால் இரண்டு முறை எண்ணெய் குளியல் செய்தால் முடியின் வறட்டுத்தன்மை நீங்கும்.