Paristamil Navigation Paristamil advert login

கூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்

கூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்

12 ஆடி 2019 வெள்ளி 13:18 | பார்வைகள் : 10016


 நீங்கள் அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூந்தல் வறண்டு போகக் கூடும். இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். உங்கள் கூந்தலை கடுகு எண்ணெய் கொண்டு அழகாக்கி விடலாம். இந்த கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

 
கடுகு எண்ணெய் கூந்தலுக்கு ஒரு நல்ல கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது. வறண்ட கூந்தலால் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை இந்த எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து சரி செய்யலாம். தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
 
 
ஒரு கப்பில் கடுகு எண்ணெய் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும். அதை தலையில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துண்டை எடுத்து அதை சூடான நீரில் நனைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதை தலையில் கட்டி 30-40 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசுங்கள். இப்படி செய்து வந்தால் சீக்கிரமே வறண்ட கூந்தல் பொலிவாக மாறும். கூந்தல் அழகு பெறும்.
 
கடுகு எண்ணெய் தேங்காய் எண்ணெயைவிட சற்று அடர்த்தி அதிகம் என்பதால் அதில் பிசுபிசுப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். சாதாரணமாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வது போல் அப்ளை செய்து கொள்ளலாம். வெளியில், அலுவலகத்துக்கு என்று செல்பவர்களாக இருந்தால், இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையுடன் கலந்து லேசாக சூடு செய்து தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரையிலும் நன்கு அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் எப்போதும் போல மைல்டான ஷாம்பு கொண்டு தலையை அலசி விடுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இதை செய்து பாருங்கள். அதனால் கிடைக்கும் பலனை நீங்களே நன்கு உணர்வீர்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்