Paristamil Navigation Paristamil advert login

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை

5 ஆடி 2019 வெள்ளி 10:01 | பார்வைகள் : 9257


 ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் மண்டையில் அது அப்பிக் கொள்ளத்தான் செய்யும். தினமும் இப்படி ஷாம்பூ போட்டு குளித்தீர்கள் என்றால், நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும். ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக்கொள்ள வேண்டும், பிறகே, தலையில் வைத்துத் தேய்க்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவிளைவை அது தரும். இல்லையேல் கூந்தலுக்கு ஆபத்துதான்.

 
எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல தரமான பெரிய பற்களுடைய சீப்பினால் வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.
 
 
கண்டிப்பாக, வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்.
 
மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ‘ட்ரிம்’ செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்.
 
இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால் வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்.
 
அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்.
 
கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்