Paristamil Navigation Paristamil advert login

கருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்?

கருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்?

12 ஆனி 2019 புதன் 14:14 | பார்வைகள் : 3684


 குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.

 
எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
 
 
வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.
 
ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.
 
அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.
 
சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…
 
எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.
 
கீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.
 
பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.
 
மாறிப்போன உணவுப் பழக்கங்கள்.
 
தவறான வாழ்வியல் பழக்கம்.
 
காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.
 
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.
 
பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.
 
மாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.
 
மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.
 
அதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்… பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.
 
புது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.
 
பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.
 
நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.
 
இதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்