Paristamil Navigation Paristamil advert login

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9126


 முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி)  தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதுதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும். 

 
தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். பின் சிறிது ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும். 
 
இவ்வாறு தினமும் 5 நிமிடம் செய்தால் போதுமானது. ஒரு வாரத்தில் உங்கள் இடையின் அளவு 2 அங்குலம் குறைந்திருப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி வயிறு மற்றும் பின் தசையை, உறுதிப்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்யும் போது பின் தசைகள், கால்களின் தசைகளை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்