Paristamil Navigation Paristamil advert login

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9024


 அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 
உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.
 
எனவே, உடல் எடையை குறைக்க பகீரத்தன முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்தி கொள்கின்றனர்.
 
ஆனால் உடல் பருமனை தடுக்க இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் உடல் பருமனை தடுப்பது குறித்து பலவித ஆய்வுகள் மேற்கொண்டனர்.
 
அதன்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஜூஸ்கள் மற்றும் நுரை ததும்பும் மது உள்ளிட்ட பானங்கள் அருந்துவதை தடுக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க வேண்டும்.
 
இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமன் ஆவதை தடுக்க முடியும். ஏனெனில் ஜூஸ்கள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது.
 
‘‘அதுவே உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் அது போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது’’ என்று பேராசிரியர் சூசன் செப் தெரிவித்துள்ளார்.
 
இந்த மிகவும் எளிமையான அறிவுரையை குழந்தைகளுக்கு பெற்றோர் தெரிவிக்கலாம். இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை குழந்தை பருவத்தில் இருந்தே தடுக்க முடியும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்