Paristamil Navigation Paristamil advert login

பட்டுப்போன்ற சருமத்திற்கு உதவும் கொத்தமல்லி

பட்டுப்போன்ற சருமத்திற்கு உதவும் கொத்தமல்லி

16 தை 2018 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 9739


 உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.

 
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.
 
 
 
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
 
தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள். உதடு கருப்பாக, உள்ளவர்கள் இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும். 
 
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்