Paristamil Navigation Paristamil advert login

சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்

சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்

10 தை 2018 புதன் 12:54 | பார்வைகள் : 9523


 றுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.

 
* சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறினாலோ அல்லது சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அவை சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள்.
 
* சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். அதோடு ஒருவித எரிச்சல் நிறைந்த வலி அல்லது அசௌகரியம் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும்.
 
* இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத உணர்வுகளும் இந்த புற்று நோயின் அறிகுறியாகும்.
 
* முதுகின் கீழ் பகுதியில் அல்லது அடி வயிற்று பகுதியில் தாங்க முடியாத வலியை உணரக்கூடும். இதுவும் சிறுநீர்ப்பை புற்று நோயின் தாக்கமே.
 
* எலும்புகளில் வலி ஏற்படுவது, சோர்வு, பாதங்களில், வீக்கம் பசியின்மை மற்றும் உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப நிலையை குறிக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்