Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு இடுப்புப் புற்றுநோய் வரக்காரணம்

பெண்களுக்கு இடுப்புப் புற்றுநோய் வரக்காரணம்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 12587


 புற்றுநோய் பெண்களை தான் அதிகம் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. 

 
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக கூறப்படுவது இடுப்பில் பாவாடை நாடாவை இறுக்கமாக கட்டுவதால் ஏற்படுவதாகும். தினசரி நாள்முழுவதும் பாவாடை நாடாவை இறுக்கி முடிச்சு போடுவதால் இடையில் கயிறு இறுகி புற்றுநோய் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். 
 
கயிறு கட்டிய இடத்தில் நிறமாற்றம் இருந்தாலோ, எரிச்சல், அரிப்பு போன்றவை இருந்தாலோ மருத்துவரை அணுகவும். பாவாடை நாடாவைக் கயிறு போல் கட்டாமல் பெல்ட் போன்று அகலமாக அமைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 
 
அலுவலகம் செல்லும் நேரம் தவிர்த்து, வீட்டில் இருக்கும் நேரங்களில் பாவாடையை இறுக்க கட்டாமல் லூசாக கட்டிக் கொள்ளுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்