Paristamil Navigation Paristamil advert login

தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி

தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9141


 * கூந்தல் வறண்டுபோய் வேதனை அளிக்கிறதா? 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள், கூந்தல் மிருதுவாகும். 

 
பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசு வென முடி வளரும். பனிக்காலத்தில் ரொம்பவும் முடி கொட்டுமே.. என்ன செய்யலாம் என்கிறீர்களா? 
 
தாமரை இலைச்சாறு, துளசிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டுங்கள். இந்தச் சாறுடன் இரண்டு மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். 
 
இப்படி தயாரான எண்ணெயை தினமும் லேசாக சூடு செய்து தலையில் தடவி வர, முடிகொட்டுவது முற்றிலும் நீங்குவதுடன் இளமைப் பிராயத்திலேயே ஏற்படும் வழுக்கையும் மறையும். 
 
* தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் - 4 கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள், கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை. 
 
* கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தனப் பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். 
 
இந்தப் பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க. தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட். 
 
* கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். 5 துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள், தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்