Paristamil Navigation Paristamil advert login

இயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுப்பது எப்படி?

இயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுப்பது எப்படி?

7 மார்கழி 2017 வியாழன் 10:36 | பார்வைகள் : 9906


 நீங்கள் வயதாவதன் முதல் அறிகுறியே முகச்சுருக்கம் மற்றும் சரும கோடுகள் ஆகும். மேலும் சருமத்தின் மீட்சித் தன்மையும் குறையும். சருமத்தில் உள்ள கொலாஜன் குறைவதால் உங்கள் சருமம் மிருதுவான தன்மையை இழக்க நேரிடும். உடலிலும் இந்த கொலாஜன் அளவு குறைவது தீவிர சரும பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

 
எனவே சருமம் வயதாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் நல்லது. இவைகள் உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்றவற்றை இயற்கையான முறையை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
 
வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மாஸ்க்
 
வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது.
 
தேவையான பொருட்கள்
 
வாழைப்பழம் - 1
ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
யோகார்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
 
செய்முறை
 
வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும். 
 
 
 
வெள்ளரிக்காய் மற்றும் யோகார்ட் மாஸ்க்
 
வெள்ளரிக்காயில் பி1, பி2, பி3, பி5, பி6, பொட்டாசியம், போலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச் சத்து கால்சியம், விட்டமின் சி, பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் உள்ளது. எனவே இது உங்கள் சருமத்தை பொலிவாக ஈரப்பதமுள்ளதாக மாற்றுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்கிறது.
 
தேவையான பொருட்கள்
 
1/2 வெள்ளரிக்காய் - பாதி
யோகார்ட் - சிறிதளவு
புதினா இலைகள் - 1 கைப்பிடியளவு 
 
செய்முறை
 
வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கிரீக் யோகார்ட் கலந்து அதை பிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு இந்த குளிர்ந்த கலவையை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். 
 
இந்த முறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் இயற்கை முறையில் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்