Paristamil Navigation Paristamil advert login

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடலைமாவு

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடலைமாவு

23 கார்த்திகை 2017 வியாழன் 11:35 | பார்வைகள் : 9552


 நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்.

 
சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
 
தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். இந்த முறையை தினமும் பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்