Paristamil Navigation Paristamil advert login

பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

17 கார்த்திகை 2017 வெள்ளி 11:04 | பார்வைகள் : 8808


 தற்போது பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதை கவனத்தில் கொண்டு தெருவுக்கு தெரு அழகு நிலையங்களை முளைத்திருக்கின்றன. பெண்களும் இங்கு சென்று ‘பிளீச்சிங்’ செய்துகொள்ள விரும்புகிறார்கள். இப்படி திடீரென முளைக்கும் அழகு நிலையங்களில் பெண்கள் செய்து கொள்ளும் பேஷியல், பேஸ் பேக் போன்றவை சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும்.

 
பிளீச்சிங் செய்தால் நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து முகம் ‘பளிச்’சென்று ஆகும் என்பது பெண்களின் எண்ணம். ஆனால் உண்மையில் பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
 
பிளீச்சிங் செய்தால் சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு, பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள வேதியியல் பொருட்கள்தான் காரணம்.
 
 
 
எனவே அழகு நிலையங்களில் வேதிப்பொருட்களைக் கொண்டு பிளீச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் கொண்டு பிளீச்சிங் செய்து, பின் பால் அல்லது தயிர் கொண்டு மசாஜ் செய்து கழுவினால், சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.
 
அடிக்கடி பிளீச்சிங் செய்து வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படக்கூடும். இதற்கு, பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முழுமையாக உறிஞ்சி விடுவதுதான் காரணம்.
 
பிளீச்சிங் செய்ய சருமத்தில் அக்கலவையைத் தடவும் போது ஒருவித எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடும். இது சாதாரணமாக இருந்தாலும், சருமத்துக்கு நல்லதல்ல.
 
எனவே, வேதிப்பொருட்கள் மூலம் பிளீச்சிங் செய்வதை எச்சரிக்கையோடு தவிர்த்துவிடுங்கள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்