Paristamil Navigation Paristamil advert login

முடி வளர்ச்சிக்கு வெந்தய குளியல்

முடி வளர்ச்சிக்கு வெந்தய குளியல்

24 ஐப்பசி 2017 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 9833


 கவனிக்க மறந்துவிடுகிற ஓன்று தலைமுடி. தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும். இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம்.

 
வெந்தயம் இரவில் படுக்கைக்கு போகும் முன் கையளவு வெந்தயத்தை எடுத்து சிறிய பாத்திரத்தில் குடிக்கும் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இரவில் மறந்து விட்டாலும் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது. 
 
ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தலையில் தடவ வேண்டும். தலை முடியின் வேர் கால்களில் படும்படி தடவினால் சால சிறந்தது. தலையில் தடவிய பின் நீங்களே வெந்தயத்தின் குளிர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடியும். சிறிது நேரம் கழித்து குளித்து விடலாம். குளிக்கும் போது வெந்தயத்தை தலையில் இருந்து நன்கு அலசி விட வேண்டும். 
 
இல்லையெனில் குளித்து முடித்த பின் ஆங்காங்கே வெள்ளை பொடி போன்று தலையில் தெரியும். தினமும் இதை செய்வது முடி வளருவதை சிறப்பாக ஊக்குவிக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு கண்டிப்பானது. வெந்தய மருத்துவம் குளிர்ச்சியான மருத்துவம். அதனால் சளி பிடித்த நாட்களில் வெந்தய குளியலை தவிர்த்து விடுங்கள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்