Paristamil Navigation Paristamil advert login

சரும பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி

சரும பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி

20 புரட்டாசி 2017 புதன் 17:22 | பார்வைகள் : 9920


 கொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இதில் மிக அதிகமான வாசனை அடங்கியுள்ளது. இது வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வாசனை உங்களது மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும். இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

 
1. அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.
 
2. கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை உணரலாம். முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.
 
3. கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்ப்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.
 
 
 
4. கொத்தமல்லி இலை, புழுங்கல் அரிசி சாதம், யோகார்ட் போன்றவற்றை நன்றாக அரைத்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும்.
 
5. கொத்தமல்லி இலை, சந்தனம், ஓட்ஸ் ஆகியவற்றை கொண்டு பேஸ் பேக் போடும் போது மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.
 
6. கொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும்.
 
7. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.
 
8. உதடுகள் நல்ல நிறம் பெற கொத்தமல்லி இலையின் சாறு உதவியாக இருக்கும். இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது முகப்பருக்களை மட்டுமல்லாமல், அதன் தழும்புகளையும் போக்குகிறது. முக சுருக்கங்களை நீக்க உதவுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்