2023 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி

6 புரட்டாசி 2023 புதன் 07:46 | பார்வைகள் : 8973
2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி நடத்தும் 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் அக்டோபர் 5ம் திகதி தொடங்கி நவம்பர் 19ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
1987 மற்றும் 2011ம் ஆண்டுகளை போல இல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெற உள்ளது.
மொத்தம் 10 அணிகள் மோத உள்ள இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
செப்டம்பர் 5ம் திகதிக்குள் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட தங்கள் அணியின் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த 2023 உலகக்கோப்பை அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், 15 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலை வெளியிட்டார்.
அதில் ரோகித் சர்மா(கேப்டன்)
ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
இஷான் கிஷான்
ஸ்ரேயாஸ் ஐயர்
கே.எல் ராகுல்
சூரியகுமார் யாதவ்
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
ஷர்துல் தாகூர்
பும்ரா
ஷமி
சிராஜ்
குல்தீப் யாதவ்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1