புத்துணர்ச்சி தரும் லெமன் டீ
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9711
சூடான பானங்களில் டீ மட்டுமே உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெரிதும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இவற்றில், லெமன் டீ மிகவும் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிளாக் டீயில் சில லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே அருமையாக மாறி விடும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயார்!
தினமும் லெமன் டீயைக் குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாகச் செரிமானமாவதற்கு லெமன் டீ உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், 1 கப் லெமன் டீ குடித்தால் அது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
லெமன் டீயைக் குடிப்பதால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களும் பலனடைகின்றன. நரம்புகளை சாந்தப்படுத்தும் லெமன் டீ, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது. இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது.
ஆனால், நீரிழிவு உடையவர்களுக்கு இதுவே மருந்து என்று சொல்ல முடியாது. இருந்தாலும் அவர்களுக்கு லெமன் டீ உதவும் என்பதே உண்மை. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.