Paristamil Navigation Paristamil advert login

தக்காளி போன்ற கன்னத்துக்கு..

தக்காளி போன்ற கன்னத்துக்கு..

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9308


 அனைத்து பெண்களுக்கும் அழகான ரோஜாப்பூ நிற கன்னங்கள் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இவ்வாறு ரோஜாப்பூ நிறக் கன்னங்கள் வேண்டுமெனில், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனெனில் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, ரோஜாப்பூ நிறக் கன்னங்களும் ஒரு அடையாளம். பொதுவாக ரோஜாப்பூ நிறக் கன்னங்களை மேக்-கப் மூலம் தான் பலர் பெறுவார்கள். அதிலும் சிலர் நன்கு வெளுப்பாக வெள்ளை நிற சருமத்தில் இருப்பார்கள். அவ்வாறு இருந்தால், அவர்களுக்கு உடலில் இரும்புச்சத்தானது குறைவாக உள்ளது என்று அர்த்தம். மேலும் அத்தகையவர்களைப் பார்த்தால், நோயாளிகள் போன்றும் இருக்கும்.

 
ஆனால் ஆரோக்கியமாகவும், எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமலும், இயற்கையாகவே, ரோஜாப்பூ நிறக் கன்னங்களைப் பெறுவதற்கு ஒருசிலவற்றை அவ்வப்போது செய்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், நல்ல அழகாக பொலிவோடு காணப்படுவதோடு, கன்னங்களும் அழகாக ரோஜாப்பூ நிறத்தில் காணப்படும். இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!
 
முகத்தை கழுவும் போது, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவினால், முகத்தில் இரத்த ஓட்டமானது நன்கு சீராக இருந்து, கன்னங்களும் நன்கு அழகாக அழுக்கின்றி பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
 
ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு, தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், ஆப்பிள் போன்ற கன்னங்களைப் பெறலாம்.
 
முகத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆவிப் பிடித்தால், முகத்தில் உள்ள கிருமிகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேறி, கன்னங்கள் நன்கு குண்டாகவும், அழகாகவும் காணப்படும்.
 
வெளியே செல்லும் போது முகம் நன்கு பொலிவோடும், ரோஜாப்பூ போன்ற நிறத்தில் கன்னங்களும் வேண்டுமெனில், அப்போது ஒரு டம்ளர் சூடான சாக்லெட் குடித்தால், அதில் உள்ள வெப்பமானது, முகத்தில் பரவி, கன்னங்களின் நிறத்தை சிவப்பாக மாற்றிவிடும்.
 
தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முகம் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் இருக்கும்.
 
 
தினமும் ஒரு டம்ளர் ஒயினை குடித்தால், உடலின் உள்ளே வெப்பமானது உருவாகி, கன்னங்கள் மட்டுமின்றி, உடலும் நன்கு ரோஸ் நிறத்தில் மாறும்.
 
நல்ல வண்ணமயமான உணவுகளான தக்காளி, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய், பீச், தர்பூசணி போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, ரோஜாப்பூ நிற கன்னங்களைப் பெற வைக்கும்.
 
தண்ணீர் அதிகம் குடித்தாலே, உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஏனெனில் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி முகம் பொலிவோடு மின்னும்.
 
தக்காளியின் சாற்றை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், தக்காளியின் நிறத்தைப் பெறலாம்.
 
துவரம் பருப்பை பாலில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நன்கு கெட்டியாக அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.
 
ரோஜாப்பூக்களை பால் சேர்த்து அரைத்து, வாரத்திற்கு 3 முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், எளிதில் ரோஜாப்பூ நிறக் கன்னங்களைப் பெறலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்