அடுத்த 20 ஆண்டுகளில் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை சீராகும்!
18 தை 2023 புதன் 15:06 | பார்வைகள் : 5371
பூமியின் மேற்பரப்பில் ஓசோன் படலத்தில் காணப்படும் ஓட்டை அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் படலமே ஓசோன் என கருதப்படுகிறது. இதில், வளி மண்டல அடுக்கை அழிக்கும் வான்வழி ரசாயனங்கள் குறைந்து வருவதாகவும், இதனால் 20 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலம் சீராகும் என்றும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2040-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1980-ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும், ஆர்டிக் துருவம் 2045ம் ஆண்டுக்குள்ளும், அண்டார்டிக் துருவம் 2066ம் ஆண்டுக்குள்ளும், 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.