வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? ஆய்வில் தகவல்
1 ஆவணி 2022 திங்கள் 19:35 | பார்வைகள் : 7628
நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் இருந்து சனியை வேறுபடுத்துவது அந்த கிரகத்தில் உள்ள கம்பீரமான வளையங்கள் ஆகும். சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, சனியின் வளையங்களை அமெச்சூர் தொலைநோக்கிகளிலிருந்தும் பார்க்கலாம். அரசர்களுக்கு கிரீடம் போல, சனி கிரகத்திற்கு அதன் வளையங்கள் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஆனால் பிற கிரகங்கள் அனைத்திற்கும் சனியைப் போன்ற வளையஙக்ள் இல்லை?
இப்படி பல விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் எழுகின்றன. சனி நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரிய கிரகம் என்ற பதிலும் சரியானதாக இருக்காது. ஆனால் வியாழன் கிரகம் சனியை விட பெரியது, அதற்கு ஏன் சனி போன்ற வளையங்கள் இல்லை?
சனியின் வளையங்கள் தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு (UCR) சமீபத்தில் நடத்திய ஆய்வில், சனி போன்ற வளையங்கள் வியாழனுக்கு ஏன் இல்லை என்பதற்கான காரணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் Planetary Science சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
UCR வானியற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் கேன் தனது மாணவருடன் சேர்ந்து ஆய்வுக்கு தலைமை தாங்கினார். இந்த ஆய்வில், அவர்கள் ஒரு உருவகப்படுத்துதல் வழிமுறைகளை பின்பற்றினார்கள். அவர்கள் வியாழனின் நான்கு நிலவுகளின் சுற்றுப்பாதைகள் மற்றும் கிரகத்தின் சுற்றுப்பாதை பற்றிய தகவலை அளித்தனர்.
கிரகத்தைச் சுற்றி வளையங்களை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது பற்றிய தகவல்களையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வுகள் மேலும் பல கிரகங்கள் தொடர்பான செய்திகளையும் தெரிவித்துள்ளது.
வியாழனால், சனி கிரகத்திற்கு இருப்பது போன்ற சந்திரனை உருவாக்க முடியாததற்கு அதன் நிலவுகளே காரணம் என்று கேன் கண்டுபிடித்தார். வியாழனுக்கு நான்கு நிலவுகள் உள்ளதாக கலிலியோ கண்டறிந்தார்.
வியாழனின் கலிலியன் நிலவுகளில் ஒன்று நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய நிலவு. இது, உருவாகக்கூடிய எந்த பெரிய வளையங்களையும் மிக விரைவாக அழிக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், வியாழனுக்கு ஏன் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்பு எப்போதுமே, சனி கோளுக்கு இருப்பது போன்ற வளையங்கள் வியாழனுக்கு இருந்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம்.