வேற்றுகிரக வாசிகள் குறித்த நாசாவின் ஆய்வு - செவ்வாய் கிரகத்தில் ஆதாரம்?
30 ஆனி 2022 வியாழன் 18:59 | பார்வைகள் : 13872
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் நிலப்பரப்பைப் ஆராய்ச்சி செய்வதில் விஞ்ஞானிகள் எப்போதுமே ஆர்வத்துடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் பணியை நாசா மேற்கொண்டு வரும் நிலையில், நாசா நடத்திய புதிய ஆய்வக சோதனையில், வேற்று கிரகவாசிகளின் தடயங்களைக் கண்டறிய, ஒரு புதிய உத்தியைக் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகளின் இருப்பை கண்டறியும் பணியை மேற்கொண்டு வரும் பர்ஸிவரென்ஸ் (Perseverance) ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் குறைந்தபட்சம் 6.6 அடி அல்லது அதற்கு மேல் தோண்ட வேண்டும் என்றும் அதன் மூல, உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு கூறுகிறது. ரோவர்ஸ் அமினோ அமிலத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டால், அது செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தன என்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், காலப்போக்கில், செவ்வாய் கிரகத்தில் உள்ள காஸ்மிக் கதிர்களால் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமும் சேதமடைந்துள்ளதாக ஆய்வு நம்புகிறது. ஆஸ்ட்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் விஞ்ஞானிகள் முன்பு மதிப்பிட்டதை விட வேகமாக சேதமடையும் என்று கூறியுள்ளது.
"செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பாறைகளில் உள்ள காஸ்மிக் கதிர்களால் அமினோ அமிலங்கள் அழிக்கப்படுவதாகவும், முன்பு நினைத்ததை விட மிக வேகமான விகிதத்தில் அமினோ அமிலங்கள் அழிக்கப்படுவதாகவும் எங்கள் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன" என்று மேரிலாந்தின் கிரீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் அலெக்சாண்டர் பாவ்லோவ் கூறினார்.
ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணை வெற்றிகரமாக துளையிட்ட நிலையில், 10 மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவான பழமையான மைக்ரோ க்ரேட்டர்கள் அல்லது பொருட்கள் வெளிவந்துள்ளதாக" என்று அவர் மேலும் கூறினார்.
வேற்றுகிரகவாசிகள் ஆதாரங்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆழமாக புதைந்திருக்கலாம் என்பதை நாசா ஆய்வு காட்டுகிறது. எனவே மேலும் ஆழமாக தோண்டினால் மட்டுமே ஆதாரங்களை பெற முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.