Paristamil Navigation Paristamil advert login

வகுப்பறையாகும் விண்வெளி நிலையம்! ஒன்லைன் வகுப்பு எடுக்கும் விண்வெளி வீரர்கள்

வகுப்பறையாகும் விண்வெளி நிலையம்! ஒன்லைன் வகுப்பு எடுக்கும் விண்வெளி வீரர்கள்

11 மார்கழி 2021 சனி 07:41 | பார்வைகள் : 12632


சீனாவின் Shenzhou 13 விண்வெளி வீரர்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் அறிவியல் பாடம் எடுக்கும் முன்முயற்சியை எடுத்துள்ளனர். விஞ்ஞானிகள் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space station)இருந்து  ஆன்லைன் வகுப்பு எடுக்க உள்ளனர்.

 
Shenzhou என்பது சீனா (China)தாயரித்துள்ள ஒரு விண்கலம் ஆகும். அதில் உள்ள விண்வெளி வீரர்களான ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்துவார்கள். டியாங்காங் நிலையத்தின் மையப்பகுதியான தியான்ஹே தொகுதியில் இருந்து விண்வெளி வீரர்கள் ஆன்லைனில் தோன்றி பாடம் நடத்துவார்கள்.
 
இந்த வகுப்பில், விண்வெளி வீரர்கள் உயிரியல் உயிரணுக்களின் நடத்தை, மைக்ரோ கிராவிட்டியில் இயக்கம்,  விண்வெளியில் (Space) உள்ள வாழ்க்கை மற்றும் தியான்ஹே விண்வெளி நிலையத்தில் உள்ள அம்சங்கள், போன்ற விண்வெளி சம்பந்தமான விஷயங்கள் பலவற்றைப் பற்றி குழந்தைகளிடம் உறையாற்றுவார்கள்.
 
இந்த வகுப்பு  "டியாங்காங் வகுப்பறை" என்ற தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தத் தொடரின் நோக்கம் சிறு குழந்தைகளுக்கு விண்வெளி மற்றும் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதும் ஆகும்.
 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்