கொடி இடைக்கு பயிற்சி
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10577
சில பெண்கள் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் இடுப்பு பகுதியில் அதிகளவு சதை இருக்கும். இவர்களுக்கு எந்த உடை போட்டாலும் நன்றாக இருக்காது. ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய விரும்பாத பெண்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் 30 நிமிடம் செய்து வரலாம்.
இந்த பயிற்சி செய்வது மிகவும் சுலபமானது, எளிமையானது. இந்த பயிற்சி விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும். பின்னர் விரிப்பில் ஒருபக்கமாக படுத்து கொண்டு வலது கையை தலைக்கு கொடுத்து தாங்கி கொள்ளவும் (படத்தில் உள்ளபடி). இடது கையை தரையில் வைக்கவும்.
இரு கால்களும் நீட்டியபடி இருக்க வேண்டும். இப்போது வலது கால் தரையில் இருக்க இடது காலை மடக்காமல் நன்றாக மேலே தூக்கவும். பின் கீழே இறக்கவும். இவ்வாறு 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் சாய்ந்து படுத்தபடி இந்த பயிற்சியை அடுத்த காலில் செய்யவும்.
இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது கால்களை மடக்க கூடாது. இந்த பயிற்சியை தினமும் 30 நிமிடம் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்ய செய்ய இடுப்பு பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.