Paristamil Navigation Paristamil advert login

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9289


முகப்பரு முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் ஒயினை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.
 
முதுமைத் தோற்றம் ரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்த, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.
 
பொலிவிழந்த சருமம் பொலிவிழந்த சருமம் நன்கு அழகாக காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயினைக் கொண்டு சருமத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்.
 
வறட்சியான சருமம் சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ஒயின் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.
கருமையான சருமம் சிலரது சருமத்தில் இறந்த செல்களானது அதிகம் இருப்பதால், சருமமானது கருமையாக காணப்படும். அத்தகையவர்கள், ரெட் ஒயினைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது முற்றிலும் வெளியேறி, கருமை நீங்கும்.
 
 வெள்ளையான சருமம் நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயினை சருமத்திற்கு தடவி வர வேண்டும்.
மென்மையான சருமம் சருமம் வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது, நன்கு மென்மையாக இருந்தால் தான், அழகு என்று சொல்ல முடியும். எனவே அத்தகைய மென்மையை பெற வேண்டுமெனில், ரெட் ஒயினை தினமும் சருமத்திற்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்