19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்
27 மாசி 2021 சனி 06:37 | பார்வைகள் : 10064
பி.எஸ்.எல்.வி.சி - 51 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிட கவுண்ட் டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
637 கிலோ எடை கொண்ட அமேசானியா செயற்கைகோள் உட்பட 19 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி - 51 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட வேண்டி, இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.