நாசா அனுப்பிய விண்கலம் செவ்வாயில் தரையிறங்குகிறது!

13 மாசி 2021 சனி 04:52 | பார்வைகள் : 12004
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய விண்கலம் வரும் 18ம் தேதி செவ்வாயில் இறங்க உள்ளது.
கடந்த ஆண்டு ஏவப்பட்ட அட்லஸ் வி என்ற ராக்கெட் பயணித்து, அதற்போது செவ்வாய் கிரகத்தின் அருகில் சுற்றிக் கொண்டுள்ளது.
இதில் இணைக்கப்பட்டுள்ள ரோவர் வாகனம் வரும் 18ம் தேதி செவ்வாயில் தரையிறக்கப்பட உள்ளது.
மணிக்கு 12 ஆயிரம் மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த ரோவர், 2 ஆயிரத்து 370 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் செவ்வாயில் தரையிறங்க உள்ளது.
இதற்கான கிராபிக்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள நாசா, இந்தத்திட்டம் வெற்றி பெறும் என எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.