ஒரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 60 செயற்கைக் கோள் கொண்ட முதல் தொகுப்பு!
23 தை 2021 சனி 05:30 | பார்வைகள் : 9054
விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் வரிசையின் 60 செயற்கைக் கோள்களை கொண்ட முதல் தொகுப்பை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கான் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
விண்ணில் ஏவப்பட்ட 1 மணி நேரம் 4 நிமிடத்தில் செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் ராணுவ செயற்கைக் கோள்கள் உட்பட, ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த தொலைதொடர்பு செய்ற்கை கோள்களும் பால்கன் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.