NASA பகிர்ந்த Neutron நட்சத்திரத்தின் படம்!
18 தை 2021 திங்கள் 17:18 | பார்வைகள் : 9560
அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா வெளியிட்டுள்ள நியூட்ரான் நட்சத்திரத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் (NASA's Chandra X-ray Observatory) இன்ஸ்டாகிராமில் படத்தைப் பகிர்ந்து கொண்டது, இதில் நியூட்ரான் நட்சத்திரம் சூப்பர்நோவா (Supernova) மீதமுள்ள ஆர்.சி.டபிள்யூ 103 க்கு நடுவில் பிரகாசமாக பிரகாசிப்பதைக் காணலாம்.
"சூப்பர்நோவா RCW 103 இன் மையத்தில் பிரகாசமாக தெரிவது நியூட்ரான் நட்சத்திரம்" என்று அந்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்மீன் மிகவும் இறுக்கமாக நிரம்பியுள்ளது என்று நாசா கூறுகிறது. அதன் எடை, எவரெஸ்ட் சிகரத்தின் எடை அளவுக்கு அதாவது, 1 பில்லியன் டன்களுக்கு மேல் இருக்கலாம் என்று நாசா கூறுகிறது.
"நியூட்ரான் நட்சத்திரத்தில் உள்ள பொருட்கள்ள் மிகவும் இறுக்கமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது, சர்க்கரை-க்யூப் அளவிலான நியூட்ரானில் உள்ள பொருட்களின் எடை 1 பில்லியன் டன்களுக்கும் அதிகமாக இருக்கும் - தோராயமாக எவரெஸ்ட் (Everest) சிகரத்தின் எடை" என்று அந்த இன்ஸ்ட்ராகிராம் பதிவு கூறுகிறது.
இந்த பதிவிற்கு இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட 'லைக்குகள்' கிடைத்துள்ளது. இது "அழகானது" என்று கருத்து தெரிவித்த பலரும் நாசாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நியூட்ரான் நட்சத்திரம் ஒரு பெரிய நட்சத்திரத்தின் சிதைந்த பகுதியாகும், ஒரு சூப்பர்நோவா எச்சம் ஒரு சூப்பர்நோவா வெடிப்பின் எஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ட கதிர்களை வினையூக்குவதிலும், கனமான கூறுகளைக் (Cosmic Rays) கொண்ட விண்மீன் திரள்களை (galaxies) வளப்படுத்துவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.