Paristamil Navigation Paristamil advert login

செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி!

செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி!

15 தை 2021 வெள்ளி 07:31 | பார்வைகள் : 9178


கேலக்சி எனப்படும் நட்சத்திரங்களின் திரள் ஒன்று, அதன் இறுதிக் காலத்தில் எரிபொருளை விரைவாகத் தீர்த்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 
புதிதாக நட்சத்திரங்களை உருவாக்கும் திறனை இழந்துவிட்டால், கேலக்சிகள் மடிந்துவிட்டதாகக் கருதப்படும். அப்படி மடிந்துவிட்ட கேலக்சிகள் விண்வெளியில் எத்தனையோ உள்ளன.
 
ஆனால் முதல் முறையாக, 9 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள, மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி ஒன்றை கண்டறிந்துள்ளனர். ID2299 என்ற அந்த கேலக்சி, அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதற்கேற்ப, ஆண்டுக்கு 10 ஆயிரம் சூரியன்களை உருவாக்கும் அளவுக்கு எரிபொருளை உமிழ்ந்து வருகிறது.
 
அந்த கேலக்சி விரைவாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும், சில மில்லியன் ஆண்டுகளில் எரிபொருள் முழுவதையும் தீர்த்து மடிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்