விண்வெளி திட்டங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா!
4 தை 2021 திங்கள் 15:54 | பார்வைகள் : 9222
கொரோனா தொற்றால் 2020ம் ஆண்டு மேற்கொள்ளப்படவிருந்த பல விண்வெளித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
நடப்பாண்டில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக நாசா அதிகாரி தாமஸ் சூர்பூசன் தெரிவித்துள்ளா. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பாக்கர் விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பது குறித்து இம்மாதம் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பென்னு (Bennu) குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்த OSIRIS-REx விண்கலம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தாமஸ் கூறியுள்ளார்.
இதேபோல் ஜப்பானின் ஹயாபுசா 2 என்ற விண்கலமும் ரியுகு குறுங்கோளில் மாதிரியை எடுத்து இந்தாண்டு திரும்பும் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார்.