பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!
2 தை 2021 சனி 08:40 | பார்வைகள் : 9856
விண்வெளியில் சுற்றித் திரியும் விண்கற்கள் அவ்வப்போது பூமியை நெருங்கி வருகின்றன. இந்நிலையில், புத்தாண்டில் ராட்சத விண்கல் பூமியை நெருங்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பூமியை நோக்கி ராட்சத விண்கல் நெருங்கியுள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. சாதாரண விண்கற்களை போல அல்லாமல் இது முரட்டுத்தனமான ராட்சத விண்கல் என்று கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டின் கடைசி விண்கல்லான இதற்கு 2020 YB4 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் விட்டம் 36 மீட்டர் மற்றும் நீளம் 220 மீட்டர் என அளவிடப்பட்டுள்ளது.
இந்த ராட்சத விண்கல் பூமியில் இருந்து 61 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 11.30 மணியளவில் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக கூடுதலாக மூன்று விண்கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், 15 மீட்டர் நீளத்திலான 2019 YB4 விண்கல்லும், இரண்டு சிறிய கற்களும் நாளை பூமியை கடக்கவிருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, மலை அளவுக்கு மிகப்பெரிய ராட்சத விண்கல் ஜனவரி 3ஆம் தேதியன்று பூமியை கடக்கவிருக்கிறது. இதன் விட்டம் மட்டுமே 220 மீட்டர் ஆகும். இது பூமியில் இருந்து 69 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும்.