Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பான்!

விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பான்!

23 மார்கழி 2020 புதன் 10:27 | பார்வைகள் : 9362


கடந்த மாதத்தோடு சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station - ISS) 20 ஆண்டுகள் தொடர்ச்சியான மனித வாழக்கை விண்வெளி வீரர்கள் நிறைவு செய்துள்ளனர். இந்த காலஇடைவெளியில் ஐ.எஸ்.எஸ் விண்கலத்தில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆராய்ச்சி, விண்வெளி தொழில்நுட்பத்தில் எண்ணற்ற முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. அதேசமயம் இது பூமியிலுள்ள மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வந்துள்ளது. 
 
முன்னதாக விண்வெளி வீரர்கள் தூக்கமின்மையைத் தவிர்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட எல்.ஈ.டி விளக்கு தொழில்நுட்பம் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருந்தது. அதேபோல விண்வெளி வீரர்களை பூஜ்ஜிய ஈர்ப்புக்கு பொருத்தமாக வைத்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு பளு தூக்கும் முறை வீட்டு உடற்பயிற்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஐ.எஸ்.எஸ்-க்கு நீர்-சுத்திகரிப்பு முறையை வடிவமைத்த ஒரு நிறுவனம், மிகவும் தேவைப்படும் இடங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் ஆற்றலுடன் ஸ்பின்-ஆஃப் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.
 
சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஈரப்பதத்திலிருந்து சிறுநீர் வரை ஒவ்வொரு துளி ஈரப்பதமும் வடிகட்டப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் அமைப்பு மிகவும் கனமானது. ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒரு முறையும் அவை மாற்றப்பட வேண்டும். மேலும் சில அசுத்தங்களை வடிகட்ட அவை தவறிவிடுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டேனிஷ் நிறுவனமான அக்வாபோரின் ஏ /எஸ் (Aquaporin A/S) அக்வாபோரின்ஸ் (Aquaporins) எனப்படும் புரதங்களைப் பயன்படுத்தும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. 
 
இது குறித்து, அக்வாபோரின் ஏ / எஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஹோம் ஜென்சன் (Peter Holme Jensen) கூறுகையில், "இது உயிரணுக்களின் உயிரணு சவ்வைக் கடக்க அனுமதிக்கும் பொறிமுறையாகும். இயற்கையில், இந்த புரதங்கள் தாவர வேர்களை மண்ணிலிருந்து தண்ணீரை உறிஞ்ச அனுமதிக்கின்றன. மேலும் இவை இரண்டு மனித சிறுநீரகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 45 கேலன் திரவத்தை வடிகட்ட அனுமதிக்கின்றன. அந்த வகையில் இந்த புரதங்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. அசுத்தங்கள் கடந்து செல்வதைத் தடுக்கின்றன" என தெரிவித்துள்ளார்.
 
விண்வெளியில் அதை பரிசோதித்த நாசா, அதன் தற்போதைய அமைப்பை அக்வாபோரின்ஸ் உடன் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. அதேபோல் இந்த தொழில்நுட்பம் வீட்டிற்கு தேவையான பயன்பாடுகளையும் கண்டறிந்து வருகிறது. உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீருக்கான அணுகல் இல்லை. வளர்ந்த நாடுகளில், குழாய் நீரின் பாதுகாப்பை பலர் நம்பவில்லை. 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழ்ந்த அதிசயம்
 
யுனைடெட் ஸ்டேட்ஸில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது நீர் விநியோகத்தின் தரம் குறித்து அக்கறை கொண்டுள்ளன. மேலும் 55% ஐரோப்பியர்கள் மட்டுமே குழாயிலிருந்து நேரடியாக தண்ணீர் குடிக்கின்றனர். இதுபோன்ற நிலையில் அக்வாபோரின்ஸ் தொழில்நுட்பம் மக்களுக்கு உதவக்கூடும். இந்த நிறுவனம் BIOFOS, டென்மார்க்கின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான கழிவு நீர் பயன்பாடு மற்றும் ஹங்கேரியில் யுடிபி என்விரோடெக்  (UTB Envirotec) உள்ளிட்ட கழிவு நீர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இவை கழிவுநீரில் இருந்து மைக்ரோபோலூட்டண்டுகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்குகளை அகற்றி, அவை கடலில் பாய்வதைத் தடுக்கின்றன. 
 
இந்த தொழில்நுட்பம் குறித்து BIOFOSல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அக்வாபோரின்ஸ் கழிவுநீரில் 95%க்கும் மேற்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் மைக்ரோபோலூட்டண்டுகளை அகற்றுகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது பாரம்பரிய முறைகளை விட மிகக் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இந்த ஆய்வை வழிநடத்திய BIOFOS கண்டுபிடிப்பு மேலாளர் டைன்ஸ் தோர்ன்பெர்க்  (Dines Thornberg) என்பவர் தெரிவித்ததாவது, "இது ஒரு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
 
அக்வாபோரின்ஸ் அமைப்பு எதிர்காலத்தில் கழிவுநீரில் இருந்து சுத்தமான குடிநீரை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று நான் நினைக்கிறேன். இது போன்ற தொழில்நுட்பங்களுடன் உலகின் பல பகுதிகளிலும் நீர் பற்றாக்குறையின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
 
2025ம் ஆண்டில் 24 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு துறையை நிறுவி, உள்நாட்டு நீர் சுத்திகரிப்பு சந்தையில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான வாய்ப்பையும் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஹோம் ஜென்சன் கண்டறிந்துள்ளார்.  
 
கடந்த மாதம், அக்வாபோரின் ஏ / எஸ் மின்சாரம் இல்லாமல் செயல்படும் ஒரு அண்டர் தி சிங்க் வீட்டு வடிகட்டுதல் (under-the-sink household filtration) முறையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் விலை 650 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் 58,000 ஆகும். மேலும் இந்த நிறுவனம் தற்போது ஐரோப்பிய சந்தையை குறிவைத்துள்ளது. 
 
இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவிற்கும், பின்னர் இந்தியா மற்றும் சீனாவுக்கும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் கூறியதாவது, இந்த தொழில்நுட்பத்தின் நீண்டகால குறிக்கோள், உற்பத்தி அதிகரிக்கும் போது நீர் குறைந்த பகுதிகளுக்கு மலிவு விலையில் தயாரிப்புகளை வழங்குவதாகும். மேலும் எங்கள் தயரிப்பு ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும் என்பதை நான் நம்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்