நிலவில் கால்பதிக்க உள்ள முதல் பெண் உள்ளிட்ட 18 வீரர்கள் பட்டியலை வெளியிட்ட நாசா!
11 மார்கழி 2020 வெள்ளி 10:35 | பார்வைகள் : 9166
நிலவுக்கு செல்ல உள்ள முதல் பெண் மற்றும் இந்திய வம்சாவளி உள்ளிட்ட 18 வீரர்களின் பெயர்களை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அறிவித்துள்ளது.
நிலவில் வீரர்களை இறக்கி, 1969ல் முதல் சாதனையை நிகழ்த்தியது அமெரிக்கா. தற்போது, இரண்டாவது முறையாக, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு 'ஆர்டெமிஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, 18 விண்வெளி வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, நாசா பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி என்பவர் உட்பட ஒன்பது ஆண் மற்றும் ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள, கென்னடி விண்வெளி நிலையத்தில், அறிமுகப்படுத்தினார்.