Paristamil Navigation Paristamil advert login

6 ஆண்டுக்கு பின் பூமி திரும்பியது ஜப்பான் விண்கலம்!

6 ஆண்டுக்கு பின் பூமி திரும்பியது ஜப்பான் விண்கலம்!

6 மார்கழி 2020 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 12269


பூமியிலிருந்து  30 கோடி  கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள ரியுகு (Ryugu) விண்கல்லில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது.

 
ஹயாபுஸா 2 (Hayabusa 2) விண்கலத்தை 2014ம் ஆண்டு ஜப்பான் அனுப்பியது. அந்த விண்கலம், மாதிரிகளை எடுத்து கொண்டு பூமிக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பியது. விண்கலத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாதிரிகள் அடங்கிய கேப்சூல், ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் இன்று தரையிறங்கியது.
 
பூமியில் ஜீவராசிகள் எப்படி உருவாகின என்பதை கண்டுபிடிக்க அந்த மாதிரிகளை கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்

 

வர்த்தக‌ விளம்பரங்கள்