செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!
28 புரட்டாசி 2020 திங்கள் 08:12 | பார்வைகள் : 9176
சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், இரண்டை வெற்றிகரமாக சீனா விண்ணிற்கு அனுப்பியிருக்கிறது.
ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து எச்ஜே 2ஏ, எச்ஜே 2பி செயற்கைக்கோள்களுடன் மார்ச் 4பி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
நில, நீர்வளம் மற்றும் பேரழிவுகளை கண்காணிக்கவும், வேளாண்மை மற்றும் வனவியல் தொழில்களுக்கான சேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.